Sunday, August 15, 2010

என் திருநாடு 2

காட்சி - 1

இடம் :
வள்ளுவனின் பள்ளி
பங்குபெறுவோர் : வள்ளுவன், கபிலன், பரணன்

அறிவுயர் அறமுயர் வள்ளுவனோடு சிறு நல வயதிருந் திருப்பவன் கபிலன்
பரணனும் இவரோடாண்டும் அரண் எனும் நட்பாய்த் திரிந்தான்
மூவர் படிப்பது பள்ளியில் உயர்நிலை தேவர் அடியைப் போற்றி
உழைப்பும் கடுமை இவரது பிழையில் முயற்சியும் செய்தனர்

வள்ளுவன் :
முயன்றோம் மூவர் ஒன்றாய்
ஆண்டுகள் இரண்டும் ஆயின தொடங்கி
ஈண்டொரு மாதமு முளதே
தவத்திருத் தேர்வினை எழுத

கபிலன் :
முயன்றோம் முடிப்போம் அச்சம் அறுப்போம்
நுழைவோம் அரியதாம் கடியதாம் இனியதாம்
இந்தியத் தொழில்நுட்பக் கழகத்துள் நாமே
முந்துவோம் முனைவோம் வெற்றி அடைவோம்

பரணன் :
இன்னும் சில நாள் அன்றி
இனிதே கழிந்த வாழ்வும் இருமா?
பள்ளியின் வாழ்வுபோல் ஒன்றும் உண்டோ?
நாமும் ஒன்றாய் இருக்கவும் மாட்டிலை

வள்ளுவன் :
வா இப்பொழுது சென்று படிப்போம்
உயர் நல மதிப்பெண் மீட்டுவம் அதனால்

பரணன்:
படிக்கிறேன் எனினும் நித்தம் இரு மணி நேரம்
வரையில் போனது யான் என் இனியாள் ஓடு
பேசுதல் தனிலே, தொலைக்கேன் அவளை
எது பொருட்டும் நான்
அவளோ எனக்காய், யான் அவளுக்காய்

வள்ளுவன் :
மொழிந்துளேன் பன்முறை
காதல் தனக்குப்
பருவம் இதன்று
கேளாய் எம் சொல்
சொல்லிப் பயனென்
சொல்லற்க பயனிலாச் சொல்

கபிலன் :
கேளார்க்கு இசை எதற்குக் - கண்காணார்க்குக் கலை எதற்கு?
மதியானுக்கோர் அறிவுரை எதற்கு?
அறிந்தும் அறிவிலானுக்குச் சிறப்பெதற்கு?
இது இனி பேச நோவது நாமே
பயனிலை,
செய்வது சொல்வோம், முடிப்போம்
வெற்றியும் உண்டு, நம் தேர்வில்,
செல்வோம் வா

பரணன் :
அங்ஙனம் இல்லை தோழரே!
புரிந்தும் கொள்மின்

கபிலன், வள்ளுவன் : (மௌனம்)

No comments:

Post a Comment