Sunday, August 15, 2010

என் திருநாடு 1

வாழ்த்து :

யானை போலும் மாபெருங் கேட்டை
யானை போலும் துதிக்கை கொண்டீ
யானை அறமது கொற்போற் கொல்லும்
யானை முகவன் காற்குத் துதிக்கை (௧)

மலர்மேல் வாச மமையா தமையா
மலர்மேல் வாசஞ் செய்யு மிவளை
மலர்மே லிட்டே வழிபட யாண்டும்
மலர்மேல் வாழ்வொன் றமையா தமையா (௨)

சிகரம் கொணர்ந்தா னிலங்கையா மந்த
நகர மெரித்தா னனுமான் - மிகவே
யுளமெலாம் முற்றும் நிறைந்தான் அவன்னல்
களங்கமில் பாதம் துணை (௩)

முன்னுரை :
ஒப்பிலா வளங்களோடும் தப்பிலா நெறிகளோடும்
விளங்குமிப் பாரதத்தைக் களங்கமில் சீற்றமொடும்
துன்பமில் இன்பமொடும் அன்பதோடிணக்கமொடும்
நெறியுளோர் மிகுந்திருக்க அறிவுளோர் சார்ந்திருக்க
நாட்டினைச் செழிப்பாக்கக் காட்டினை இயல்பாக்க
எங்குமே இருந்திடாதப் பொங்குமா வளங்கள் கொண்டுச்
சிங்கமாய்ச் சீறி நிற்கும் தங்கமாம் நாட்டுக்காக
இன்னுயிர் இழந்தும்கூட பொன்னுயர் நாட்டைக் காத்தப்
பேருயர் வீரர் போல ஆருயிர் ஈண்டிங்கார்க்கும்
பாரத மக்கள் தம்மை நாரதர் போல யானும்
மாற்றிட எடுத்த வேள்வி ஆற்றிட வேண்டிய வேள்வி
இதுதான் என்றன் செய்யுள் திதிப்பாம் தமிழின் சொல்லில்

No comments:

Post a Comment